ஒரு வரிக்கவிதைகள்

 

என்றோ செய்த உழைப்பிற்கு,  இன்று கேட்காமல் கிடைத்த கூலி -  அதிர்ஷ்டம் !

 

தமிழ் நாட்டில் தமிழ் பேசு தங்கக்காசு, இது கதையல்ல நிஜம் !

 

மருமகளின் பொன்நகை, பொறுத்தே அமையும் மாமி அவளின் புன்னகை !

 

ஹைக்கூ கவிதைகள்

 

பள்ளிச்சிறுவன் பாரதி

 

சாதிச்சான்றிதழைச் சமர்ப்பித்துவிட்டு வகுப்பிற்குச் சென்றான் சிறுவன் பாரதி,

பாடம் தொடங்கியது “சாதிகள் இல்லையடி பாப்பா ! ”

 

கவிதை

 

“ஆம்! சத்தியமாகத்தான் கூறுகிறேன், எனக்கு கவிதை எழுதத்தெரியாது”

என்று வைரமுத்து கூறினால், அதுவும் கவிதை தான் !

 

இன்பவிபத்து

 

விபத்தில் இறந்தவர்கள் மட்டுமல்ல, பிறந்தவர்களும் உண்டு

தரமற்ற தடைச்சாதனம் !

 

அந்நியம்

 

அந்நிய தேசத்தோழனை, அருகில் கொண்டுசேர்த்த “முகப்புத்தகம்”

முகம் கொடுத்தவளை அந்நியமாக்கியது !

 

தொலைதூரத்தில் அப்பா !

 

பிக்சல் சிரிப்போடு பிள்ளை முகம்,

மானிட்டர் மேல் பொழியும் முத்தமழை,

மௌஸ் க்ளிக்கில் மனிதஉறவு !

( 21 ஆம் நூற்றாண்டிற்கு உங்களை “அன்புடன்” வரவேற்கிறோம்! )

 

சாதனை செய்வோம் !

 

நாமறிந்த “கலாச்சாரம்” என்பது தொலைக்காட்சியில் காட்டிய

விஷயங்களாக மட்டும் இருப்பது வேதனை !

பழம்பெருமை பேசித்திரிவதுடன்

காலத்திற்கேற்ப படைக்க வேண்டும் பல சாதனை !

- ஸ்ரீராம் முத்து இருளப்பன்

By admin Jan 26, 2014 one response

Comments (1)

 • sami says:

  சாதகங்கள் சங்கமித்து
  சரித்திரங்கள் சரணடைந்த
  சமரசம் சஞ்சரிக்கும் சமயம் இது…

  ஆம், கலைகள் காணொளியில்…
  உறவுகள் மடிதிரையில்…
  உணர்வுகள் தொடுதிரையில்…
  மார்தட்டிகொள்ளும் சாதனை…

  என்னே ஒரு வேதனை
  பாராட்டும் விசைப்பலகையில் அச்சுக்களாகி
  இணையதிலல்லவா இயம்ப முடிகிறது தோழா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

பின் தொடர!


Hit Counter by technology news