எம் தேசிய தலைவருக்கு – தமிழ் மாவீரர்கட்கு – எம் உயிர்க்கு இனிப்பான தமிழ் சொந்தங்களுக்கு –    இது சமர்ப்பணம்

நாவசைக்க கூட நாதியில்லாமல்…

நாடோடியாய் மனித குலம் திரிந்த போது…

“நாடுகளை – கட்டி” ஆண்டவன் !

நாகரீகத்தை கற்றுத்தந்தவன் !!

இருக்கும் இடம் தெரியாமல் மூடராய் மனிதர் பாரினிலே, நரபலி கொடுத்துக்கொண்டிருந்தபோது..

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே திரைகடல் ஓடி திரவியம் தேடி வீர புலிக்கொடி பறக்கவிட்டவன்..

- “தமிழன்”

பெருமை படுகிறேன் “நானும்” தமிழன் என்று சொல்ல.. இல்‌லை இல்லை “கர்வம்” கொள்கிறேன்!!!

நாட்டியமும் நன்னூலும் கண்ட இனம்..

சிலப்பதிகாரமும் சிலம்பமும் பெற்ற இனம்..

வேலோடு – வேழத்தோடு ! களரியோடு – கம்போடு நாடுகாத்த நல்லினம்!!

ஐய்யகோ!

எம் ஈழத்தில் – கூட்டம் கூட்டமாக நச்சு குண்டுகளுக்கு இரையாகின்றன.. சில நாய்களுக்காக..

என் சொல்வேன் ??

தரணி ஆண்ட இனமிது.. இன்று எங்கள் தமிழ் பேச்சிலும் ஆங்கில கலப்பு !

120 நாடுகளில் வாழும் என் உயிர்க்கு இனிப்பான 12  கோடி தமிழ் சொந்தங்களுக்கு.. செய்தியை அனுப்பு !!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கமிட சொன்னான் முண்டாசு கவி..

முழக்கம் வேண்டாம்… தோழரே! தோழியரே!!

சக தமிழனோடு மட்டுமாவது தமிழில் “செந்தமிழில்” பேசுவோம் !!!

 

தமிழோடு பாசமாக , தமிழே எங்கள் சுவாசமாக வாழும் இனமடா..

மானம் காத்த மறவர் கூட்டம் – மீண்டும் எழுவோம் எங்கள் தமிழ் மரபு காப்போம்..

தமிழே மூச்சாக செந்தமிழே எங்கள் பேச்சாக.. வாழ்வோம் !!!

 

தமிழ் நம் மொழியல்ல.. நம் உயிர்..

- தமிழ் எறும்பு..  வசந்தன்

By admin Jan 11, 2014 7 responses

Comments (7)

 • சத்தியகீர்த்தி says:

  வாழ்த்துக்கள் தமிழ் எறும்பு வசந்தன் அவர்களே…எறும்பு ஊர கல்லும் தேயும்… உங்களுடைய கவிதைகளையும் கருத்துக்களையும் நமது தமிழ் சங்கம் வலைத்தளத்தில் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.
  நன்றி,
  இப்படிக்கு,
  சத்தியகீர்த்தி

 • Magesh S says:

  முதல் பரிசு பெற்ற என் ஆருயிர் தொழனக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. உணர்ச்சி மிகுந்த கவிதை.. விவரிக்க வார்த்தையில்லை!

  “நாடுகளை – கட்டி” ஆண்டவன் !
  நாகரீகத்தை கற்றுத்தந்தவன் !!
  மானம் காத்த மறவர் கூட்டம் – மீண்டும் எழுவோம் எங்கள் தமிழ் மரபு காப்போம்..
  தமிழே மூச்சாக செந்தமிழே எங்கள் பேச்சாக.. வாழ்வோம் !!!

 • Anandha Lakshmi A says:

  i am from tamilnadu. i always have concerns on deprecation of our language due to IT advent. But when i see people like vasanth, i am reassured my generation will have tamil to read and relish. Hats off vasanth.

 • kaja says:

  tamil pesuvom. thalai nimirndhu nindriduvom… Kaviye Um varigalil thamilin marumalarchi kandom.. Tamilin sirapukalai vinnoka eidhum un sem pani sirapadaiya em valthukkal.. miga arumaiyana padaipu

 • vasu says:

  என் நண்பரின் கவிதை…வாழ்த்துக்கள்….

 • சரியாக சொன்னாய் வசந்தா.வாழ்த்துக்கள், எங்கும் தமிழே என்று சங்கே முழங்கு …!
  என் உடன்பிறவா தமிழ் மக்கள்
  அனைவருக்கும் என்
  உற்சாகமான பொங்கல்
  நல்வாழ்த்துக்கள்…

 • சரண் says:

  மனமார்ந்த வாழ்த்துக்கள்…….
  அனைவருக்கும் பொங்கல்
  நல்வாழ்த்துக்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

பின் தொடர!


Hit Counter by technology news