முழுமையான காதலின்  முழு உருவாய்  நீ இருக்க

முதல் அடியில் சிறுதுளியாய்  வடிவெடுத்து

மெதுமெதுவாய்  விதையாகி  உருவெடுத்து

நீ வளர உறுதுணையாய் நான் இருப்பேன்..

வந்து விடு சீக்கிரமே..

 

தினம் கனவில் தோன்றும் நீ

கரம் உயர்த்தி அழைத்ததும்

மாரோடு சேர்த்து அணைத்த என் கரங்கள்

துடி துடித்து ஏங்கும்

விடிந்து எழுந்தும் கூட..

எப்பொழுதும் அன்போடு நான் கட்டித்தழுவும்  பிறர் பிள்ளை

ஆசையுடன் விளையாடும் என்னுடன்..

நினைத்துப்பார் என் உயிராகும்  உன்னை நான்

எப்படி எல்லாம் நேசிப்பேன் என்று..

வந்து விடு சீக்கிரமே..

 

உன் நினைவில் உன் தந்தை

அணுதினமும் ஏக்கம் கொண்டு

உயிர் துடிக்கும் உணர்வினை

தன் சிரிப்பில் மூடி மறைத்து..

கனவெல்லாம் நிறைவேறும் காலம் இனி தூரம் இல்லை

கவலை தவிர்த்திரு என்று

எனக்கு ஆறுதலாய் அவர் இருக்க..

நீ வந்து சேரும் முன்னரே

உன்னை நேசித்து காத்திருக்கும் இரு உயிர்கள்..

வந்து விடு சீக்கிரமே..

                                                     சங்கரிப் பிரியா

By admin Jan 11, 2014 2 responses

Comments (2)

  • சத்தியகீர்த்தி says:

    சங்‌கரிபிரியா மிகவும் அருமை.தமிழால் தமிழ் கடவுள் முருகனை அழைப்பதுபோல் உள்ளது. வாழ்த்துக்கள்.
    நன்றி,
    இப்படிக்கு,
    சத்தியகீர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

பின் தொடர!


Hit Counter by technology news