நம் நட்பு / காதல்  ஒரு இரட்டை கிளவி !!! 

அழகாக பகிர முடியும்

பிரிக்க முடியாது!!!!!!! – (நம் நட்பு)

 

நம் அன்பு ஒரு ஆகு பெயர் !!! 

எதை உணர்த்தி எதை குறிக்கும் என்று

கூற முடியாது!!!!!!!!!!!! – (நம் அன்பு)

 

என் வாழ்க்கையின்  அன்மொழித்தொகை நீ….!!!

நம் ஆசைகளின் எல்லை வேற்றுமை இல்லாத தொடர்………. 

நம் கனவு, தொகை இட முடியாத கையொப்ப  குவியல்

நம் உறவு, ஒரு குணம் கொண்ட பல பொருள் கொண்ட உரிமையுள்ள புதிர்!!!!!!

 

வலி மிகுந்த இடங்கள்

உறவாட முடியாத காலங்கள்

பரிதவித்து போன வருடங்கள்

பிரிந்து சென்ற நேரங்கள்….

 

அனைத்தும் - நேற்று வரை அகராதி காணாத வார்த்தைகள்

நாளை முதல் நம் இளமை பருவ வருடல்கள்

இனி என்றும் நம் நினைவில் - அவை

பசுமை நிறைந்த சோலைகள்!!!!!!!

சுரேஷ் பாபு

By admin Jan 11, 2014 2 responses

Comments (2)

 • சத்தியகீர்த்தி says:

  வாழ்த்துக்கள் சுரேஷ் பாபு…பள்ளி பருவத்தை மட்டுமில்லாமல் தமிழ் இலக்கணத்தையும் நினைவு கூர்ந்ததிற்க்கு நன்றி … உங்களுடைய கவிதைகளையும் கருத்துக்களையும் நமது தமிழ் சங்கம் வலைத்தளத்தில் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.
  நன்றி,
  இப்படிக்கு,
  சத்தியகீர்த்தி

  • R. Sureshbabu says:

   மிக்க நன்றி சத்தியகீர்த்தி அவர்களே….!!!!
   இதுவே எனது முதல் கவிதை…!!!!
   கவிதை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்ததும், உங்களுடைய பாராட்டுகளும்
   என்னை மிகவும் ஊக்குவிக்கின்றன…!!!!
   இனி என் கவிதை பணி செவ்வனே தொடரும், அவற்றை நம் தமிழ் சங்கத்தில் இனி எதிர் பார்க்கலாம்…!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

பின் தொடர!


Hit Counter by technology news