உயிரோடு சுமை, இறக்கி வைக்கவில்லை, நீயே இருப்பதால்,

 

தீண்டும் தென்றலின் விரலெல்லாம் உன் ஸ்பரிசம்,

 

உறக்கமும் விழிப்புமில்லா கண்களில், நீர் குழைத்த வர்ணமாய் உன் முகம்,

 

என் முகம் பார்க்க மறுக்கிறேன், விழி உனைக்கேட்கும் என்பதால்,

 

உனைத்தேடையில் எனைத்தொலைப்பது  சுகம்,

விழி வலிக்க பனித்திருப்பது சுகம்,

 

என் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவும் உனைத்துரத்துவதாய்,

விடுகதையாயும், விடையாயும்,

 

உன்னில் தொடங்கி உன்னில் முடியும் நாட்கள்,

 

இமை ஈரம் குடித்து வளரும் நம் காதல்,

நெற்றி முத்தத்தோடு மலரட்டும்.

வனிதா

By admin Jan 11, 2014 no responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

பின் தொடர!


Hit Counter by technology news