வெளிநாட்டுப்பயண மெனினும்

வேர்விட்டுப் போய்விடுமா

தமிழ்நாட்டுப்பாரம்பரியம்…

 

அந்திசாயும் வேளை

வாட்டிவிடும் குளுமை

அழகிய தனிமைப்பயணத்தில்

அசைப்போடும் தாயக நினைவுகள்

தாலாட்டும்…

 

புழுதிகளில் புரண்டெழுந்து

புன்னகையை முகமணிந்து

புத்தாடைதனை கனவிலென்னி

புதுநாளதனை நோக்கியே

மகிழ்ந்தாடிய நாட்களவை…

மாதங்கள் தவறினும்

விழாக்கள் தவறியதில்லை…

 

கனிகளில் விழித்து

நதிகளின் கரைகளில்

உறவுகளோடு உண்டு  கதைத்துக் களித்த

சித்திரைப்  பௌர்ணமி

சிந்தை நிறைந்திடும் அருமையெண்ணி

 

முருகா நீயோ அவதாரம்

திருக்குமரா உன்னிலில்லை அரிதாரம்

அழகா, ஞானப்பண்டிதா நீயே

தமிழுக்கு அலங்காரம்

நீங்கிவிடுமா உள்ளத்தினின்று வைகாசி விசாகம்

 

பாத முயர்த்தி நடனம் பாடிய

நாயகனே, நினை வணங்கி

வளர்ந்திடும் சிதம்பர ரகசியம்

விஞ்ஞான மறியா மெய்ஞானம்

உன்னை நாளும் தொழுதிடும் ஆனி உத்திரம்

ஆணி அடித்தார்ப்போல் உள்ளத்தில் பத்திரம்…

 

விதையகளின் வீரிய மறிந்து

எதிர்வரும் வரும் கால மதன்னின்

கைகளில் செல்வ பெருக் கொள்ளும்

எண்ணமே சிரமதனின் அறிவுகொண்டு

அவருவிகளின் பெருக்கில்

ஆசையாய் முக்குளித்த

பூமகள் கருவினில் விதைக்கும்

மாதமன்றோ ஆடி

அவளில் பிறக்கும்  மழலைகைள்

சிரிப்பினில் உலகம் மகிழ்ந்திடுமே ஆடிப்பாடி

மனம் ஏங்குதே அதனைத் தேடி…

 

மெல்ல கருவினில் மீண்டெலும்

வண்ணக்குயி லலைகளின்

மேன்மை பெருக சீர்திருத்தி

பாசமுடன் காத்திடும் ஆவணி…

 

இவளின் வழிதொடர்ந்து

முப்பருவ மாற்றி பூக்கும் நிலைக்கு

திருப்பும் புரட்டாசியில்

புலால் தவிர்த் திருப்போம்

புன்முறுவலை சூடியிருப்போம்

பூமகளே உன்னை மறவாது நினைத்திருப்போம்…

 

ஓடிய மாதங் களாறு

ஓசையின்றி ஓடிரு மாறு

ஐப்பசி தன்னில் சற்றே தணிந்திடுமே பாரு

கொண்ட பொருளும் செல்வ பெருக்கிடும்

பாட்டும் கூத்தும், உறவோடு கூடிக் கழிக்கும்

விருந்தும் உள்ளம்தன்னில் மறைந்திருமா கூறு…

 

அகல் விளக்கின்தீப மதனில்

சூடிய இருளும் சூன்ய மாகும்

வெடிகள் கொளுத்தி

வேடிக்கைகள் உயர்த்தி

கேளிக்கைகள் களிக்க

வாடிக்கையாவிட்ட தீபாவளி

என்றும் கார்த்திகையின் நேர்த்தியாக

நெடுங்காலம் சுடர்விடும் கதிரன்றோ…

 

இல்லத்தினில் மங்கலம் உயர்த்தி

மாத முப்பதும்  மதி நிறுத்தி

மனமுருகப் பெருமாளின்

அருள் வேண்டிபெரும் மாதம் மார்கழி…

பாவை இரண்டும் திருவழி நெடுக

சங்கொலி முழக்கத்தில் பாடிச்செல்லும்

ஊர்வலம் பனிக்காலைப்பொலுதினில்

அடடா கண்களில் பதிந்துவிட்ட காணொளி…

 

காலம் கனிந்ததடி

மனமும் நிறைந்தடி…

வடுகெடுத்த வரப்புகளில்

வீசிவிட்ட நெல்மணிகள்

நேர்நின்று வளர்ந்ததடி

எடை கூடி  இடை தளர்ந்து

தொங்கியக் கதிரறுத்து

சோறு பொங்கி செங்கரும்பும், மஞ்சளும்

குழைவாழையும் ஒருங்கே கூட்டிப்

பொங்கலோ பொங்கலென பெருங்குரலெடுத்து

வரம் தந்த வாச னவனை

வாஞ்சையுடனே தொளுதிடுவோமே…

நெய்வாசம் பொங்கிய

பொங்கலின் சுவையதனை

நெடுவாழ்வும் கொணர்ந்திடுவோமே…

ஆதவனின் துணையில்

நிலமகள் பொங்கி படைத்த

அறுவடைக் குவியல்களால்

ஈட்டியப் பொருளுக்கு

போட்டிடுவார் அடித்தளம்

ஆம், இல்லறம் தொடர்ந்திட

உள்ளங்கள் இணைந்து  புது உறவுகள்

மலர்ந்திட  தொடர்வரும்

மாசியும், பங்குனியும்

மனதுடனே சிலிர்த்திருக்கும்…

அஃதொன்றில பல நிகழ்வுகள்

பாசத்துடனே பார்வையில் வீற்றிருக்கும்….

 

இவ்வாறன்றோ இன்பக்  கண்ணிகளின்

பினைப்பினில் தொடர்ந்திடும்

ஆண்டுகள் அறுபது,

ஆயினும் நம் தமிழுக்கு என்றுமே

வயது துளிர்ந்திடும் இருபது….

சாமி

By admin Jan 11, 2014 one response

Comments (1)

Leave a Reply to vinoth Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

பின் தொடர!


Hit Counter by technology news